கடலூர் மாவட்டத்தில் விதை பரிசோதனை திட்ட பணிகளை இணை இயக்குனர் ஆய்வு
கடலூர் மாவட்டத்தில் விதை பரிசோதனை திட்ட பணிகளை இணை இயக்குனர் மல்லிகா ஆய்வு செய்தார்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் உள்ள விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று, விதை ஆய்வு மற்றும் விதை பரிசோதனை திட்ட பணிகளை ஆய்வு செய்வதற்காக கோவை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை இணை இயக்குனர் மல்லிகா கடலூர் வந்தார்.
பின்னர் அவர் கடலூர் அருகே மதலப்பட்டு கிராமத்தில் அமைக்கப்பட்டு உள்ள உளுந்து விதைப்பண்ணையை ஆய்வு செய்தார். அப்போது விதைச்சான்று அலுவலர்களிடம், விதைப்பண்ணைகளில் உள்ள கலவன் நீக்கம் பற்றி விவசாயிகளுக்கு அறிவுரை வழங்குவதோடு, இல்லாமல் அதிக மகசூலுடன் கூடிய தரமான விதை உற்பத்தி தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
விதை பரிசோதனை கருவிகள்
தொடர்ந்து கடலூர் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தின் கிடங்கில் விதை இருப்பு, பதிவேடுகள் பராமரிப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தார். அதன்பிறகு நல்லாத்தூர் விதை விற்பனை நிலையத்திலும் ஆய்வு செய்தார்.
பின்னர் கடலூரில் இயங்கி வரும் விதை பரிசோதனை மையத்தில் விதைகள் முறையாக ஆய்வு மேற்கொள்ளப்படுகிறதா? என்றும், விதை பரிசோதனை கருவிகள் அனைத்தும் முறையாக செயல்படுகிறதா?, பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்றும் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் அலுவலகத்திலும் அவர் ஆய்வு செய்தார்.
அறிவுரை
அப்போது, அலுவலர்களிடம், நல்ல மகசூலுக்கு நல்ல விதையே ஆதாரம். ஆகவே நீங்கள் வயல் மற்றும் விதை தரம் சார்ந்த பணிகளை முறையாக செய்ய வேண்டும். அங்கக விவசாயத்தை விவசாயிகளிடம் பிரபலம் அடைய செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
ஆய்வின் போது உதவி இயக்குனர்கள் பூவராகன், பிரேமலதா, விதைச்சான்று அலுவலர்கள், விதை ஆய்வாளர்கள், விதை ஆய்வக தொழில்நுட்ப அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story