கரூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா தொற்று


கரூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 21 April 2021 5:24 PM GMT (Updated: 21 April 2021 5:24 PM GMT)

கரூர் மாவட்டத்தில் மேலும் 39 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரூர்
39 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் கரூர் மாவட்டத்தில் மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அதன்படி அரவக்குறிச்சியை சேர்ந்த 23 வயது பெண், கரூர் காந்திகிராமத்தை சேர்ந்த 30 வயது வாலிபர், 34 வயது வாலிபர், வாங்கப்பாளையத்தை சேர்ந்த 47 வயது ஆண், புகழூரை சேர்ந்த 57 வயது ஆண், ராமகிருஷ்ணபுரத்தை சேர்ந்த 44 வயது ஆண், நரிக்கட்டியூரை சேர்ந்த 22 வயது பெண், தெற்கு நரசிம்மபுரத்தை சேர்ந்த 32 வயது பெண்.
பசுபதிபாளையம்
கரூர் வள்ளுவர் தெருவை சேர்ந்த 42 வயது ஆண், மண்மங்கலத்தை சேர்ந்த 60 வயது மூதாட்டி, ராயனூரை சேர்ந்த 25 வயது பெண், பசுபதிபாளையத்தை சேர்ந்த 36 வயது ஆண், தவிட்டுபாளையத்தை சேர்ந்த 60 வயது மூதாட்டி, வேடிச்சிபாளையத்தை சேர்ந்த 38 வயது பெண், கவுண்டம்பாளையத்தை சேர்ந்த 78 வயது முதியவர். புலியூரை சேர்ந்த 33 வயது பெண், வாங்கலை சேர்ந்த 45 வயது ஆண் உள்பட 39 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story