தீ தொண்டு நாள் வார விழா உறுதிமொழி ஏற்பு


தீ தொண்டு நாள் வார விழா உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 21 April 2021 11:01 PM IST (Updated: 21 April 2021 11:01 PM IST)
t-max-icont-min-icon

தீ தொண்டு நாள் வார விழா உறுதிமொழி ஏற்பு நடந்தது.

கரூர்
தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை சார்பில் தீ தொண்டு நாள் வார விழாவையொட்டி தீயணைப்பு வீரர்களின் வீர தியாகத்தை நினைவூட்டும் வகையில் வீரவணக்க செய்தியினை உதவி பொது மேலாளர் (பாதுகாப்பு) தஞ்சராயன் முகவுரையாக வழங்கினார். அதை தொடர்ந்து, காகித ஆலையில் பணிபுரியும் அதிகாரிகள், தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் முன்னிலையில் தீ தொண்டு நாள் வார விழா உறுதி மொழியை உதவி மேலாளர் (பாதுகாப்பு) சங்கிலிராஜன் வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றார்கள். 
இந்த விழாவில் முதன்மை பொது மேலாளர் (உற்பத்தி) தங்கராஜூ, பொது மேலாளர் (மனிதவளம்) டேவிட் மாணிக்கம், உதவி பொது மேலாளர் (பாதுகாப்பு) ராதாகிருஷ்ணன் மற்றும் காவல் துறை ஆய்வாளர் வைத்தியநாதன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இதற்கான ஏற்பாடுகளை பாதுகாப்புத் துறையினர் செய்திருந்தனர்.

Next Story