பிரியாணி கடையில் மோட்டார் சைக்கிள்-செல்போன்கள் திருட்டு போலீஸ் நிலையத்தில் புகார்


பிரியாணி கடையில் மோட்டார் சைக்கிள்-செல்போன்கள் திருட்டு போலீஸ் நிலையத்தில் புகார்
x
தினத்தந்தி 21 April 2021 11:04 PM IST (Updated: 21 April 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

பிரியாணி கடையில் மோட்டார் சைக்கிள்-செல்போன்கள் திருட்டு நடந்தது.

கரூர்
கரூர் வடக்கு காந்தி கிராமத்தை சேர்ந்தவர் பாபு (வயது 50). இவர் கரூர் ரெட்டிபாளையத்தில் பிரியாணி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த கடையில் புதுச்சேரியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கடந்த சில நாட்களாக சப்ளையராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ராஜ்குமார், பாபுவின் மோட்டார் சைக்கிளையும், கடை ஊழியர்களின் 2 செல்போன்களையும் திருடி சென்று விட்டார். இதுகுறித்து கடை உரிமையாளர் பாபு கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எழிலரசன் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை தேடி வருகிறார்.

Next Story