மது விற்ற 8 பேர் கைது


மது விற்ற 8 பேர் கைது
x
தினத்தந்தி 21 April 2021 11:07 PM IST (Updated: 21 April 2021 11:07 PM IST)
t-max-icont-min-icon

மது விற்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

நொய்யல்
புன்னம் சத்திரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை பகுதியில் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் மது வி்ற்றுக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தெருவைச் சேர்ந்த பால்ராஜ் (வயது 30) மற்றும் அதியமான் கோட்டையில் மது விற்றுக் கொண்டிருந்த மசக்கவுண்டன் புதூரைச் சேர்ந்த மணிகண்டன் (22), மணி என்கிற மணிகண்டன் (23) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் குளித்தலை அருகே உள்ள வலையப்பட்டி கணேசபுரம் மற்றும் குளித்தலை சுங்ககேட், பெரியபாலம் ஆகிய பகுதிகளில் மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார், அங்கு மது விற்ற முத்து (63), பாப்பாத்தி (58), சிவா, ரவி (50), வடிவேல் (36) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மொத்தம் 47 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Next Story