5 பேர் மீது வழக்கு


5 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 21 April 2021 11:23 PM IST (Updated: 21 April 2021 11:23 PM IST)
t-max-icont-min-icon

இளையான்குடி அருகே இருதரப்பினர் இடையே நடந்த மோதலில் 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.

இளையான்குடி,

இளையான்குடி அருகே உள்ள மேலாயூர் கிராமத்தில் வசிக்கும் பாலகிருஷ்ணன் மற்றும் பெரியசாமி குடும்பத்தினர் இடையே காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் பதிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். பாலகிருஷ்ணனின் மனைவி சாந்தி(வயது 45) கொடுத்த புகாரில், பெரியசாமி(60), அவரது மனைவி இருளாயி(55), அவர்களது மகன் கண்ணன்(29) ஆகியோர் தாக்கியதாக தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக பெரியசாமி மகன் கண்ணன் கொடுத்த புகாரில் பாலகிருஷ்ணன், அவரது மனைவி சாந்தி ஆகியோர் தாக்கியதாக தெரிவித்து இருந்தார். 2 புகாரின் பேரில் இருதரப்பை சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story