விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
உரவிலை உயர்வை கண்டித்து எஸ்.புதூர் பஸ் நிறுத்தம் அருகே விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் பஸ் நிறுத்தம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு எஸ்.புதூர் ஒன்றிய விவசாயிகள் சங்க செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் உரவிலை உயர்வு, டெல்லியில் போராடும் விவசாயிகள் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் மோகன், பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் சேதுராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் காந்திமதி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story