காரைக்குடி,
காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி சீனிவாசா நகரை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து பாலமுருகன் தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய .விசாரணையில் காரைக்குடி கணேசபுரத்தை சேர்ந்த 17 வயதுடைய 2 சிறுவர்கள் மற்றும் விக்னேஷ் (வயது 19) ஆகிய 3 பேரும் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது.கணேசபுரத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனை கைது செய்த போலீசார் அவனிடமிருந்து மோட்டார் சைக்கிளை மீட்டனர். மற்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.