சிறுமி மாயம்
சிறுமி மாயம் ஆனார்
வெள்ளியணை
வெள்ளியணை அருகே உள்ள மணவாடி மங்கை நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் மனைவி பஞ்சவர்ணம். இத்தம்பதியின் மகள் பீர்த்தி (வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இப்போது கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருப்பதால், பெற்றோர்கள் வேலைக்கு சென்றுவிட சிறுமி வீட்டில் இருந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 19-ந்தேதி வேலைக்கு சென்ற பெற்றோர், பின்னர் வீட்டில் வந்து பார்த்தபோது பீர்த்தியை காணவில்லை. இதையடுத்து உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து பஞ்சவர்ணம் வெள்ளியணை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story