ஊருக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம்
வால்பாறை அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானை காரையும் சேதப்படுத்தியது.
வால்பாறை
வால்பாறை அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானை காரையும் சேதப்படுத்தியது.
காட்டு யானை அட்டகாசம்
வால்பாறை சுற்று வட்டார பகுதியில் ஒற்றை யானை மட்டும் சுற்றி வந்ததுடன், அவ்வப்போது குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.
இந்த நிலையில் அந்த காட்டு யானை, சோலையார் அணை இடது கரை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்துக்குள் புகுந்தது.
பின்னர் அங்கு பலாப்பழங்களை சாப்பிட்டு அட்டகாசத்தில் ஈடுபட்டதுடன், அங்கு நிறுத்தி இருந்த பசீர் என்பவருடைய காரை தூக்கி வீட்டின் சுவற்றில் வீசியது. இதில் அந்த காரும், வீட்டின் சுவரும் சேதமானது.
எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
இது குறித்து தகவல் அறிந்த மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் அந்த காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.
தொடர்ந்து அந்த காட்டு யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, தற்போது பலாப்பழ சீசன் தொடங்கிவிட்டதால், மரங்களில் பலாபழங்கள் பழுத்து தொங்குகிறது.
எனவே அதை சாப்பிட காட்டு யானைகள் வருவதால், இரவு நேரத்தில் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story