சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 8 ஆண்டு சிறை

சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 8 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 21 April 2021 11:39 PM IST (Updated: 21 April 2021 11:39 PM IST)
t-max-icont-min-icon

பேச்சிப்பாறை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ரப்பர் பால்வெட்டும் தொழிலாளிக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது.

நாகர்கோவில்:
பேச்சிப்பாறை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ரப்பர் பால்வெட்டும் தொழிலாளிக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது.
சிறுமி பாலியல் பலாத்காரம்
பேச்சிப்பாறை காந்திநகர் பொதுஸ்தலம் பகுதியை சேர்ந்தவர் கேசவன் (வயது67), ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு 17 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்து ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் குழித்துறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரை விசாரித்த போலீசார், கேசவனை கைது செய்து நாகர்கோவில் போக்சோ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி எழில் வேலவன் விசாரித்து வந்தார். நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. 
8 ஆண்டு சிறை
தீர்ப்பில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கேசவனுக்கு 8 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். 
இந்த வழக்கில் அரசு தரப்பில் போக்சோ கோர்ட்டு அரசு வக்கீல் முத்துகுமாரி ஆஜராகி வாதாடினார்.

Next Story