கொரோனா பரவலை தடுப்பது குறித்த ஆய்வு கூட்டம்


கொரோனா பரவலை தடுப்பது குறித்த ஆய்வு கூட்டம்
x
தினத்தந்தி 21 April 2021 11:44 PM IST (Updated: 21 April 2021 11:44 PM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி தாலுகா அலுவலகத்தில் கொரோனா பரவலை தடுப்பது குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி தாலுகா அலுவலகத்தில் கொரோனா பரவலை தடுப்பது குறித்த ஆய்வு கூட்டம் தாசில்தார் திருநாவுக்கரசு தலைமையில் நடந்தது.இதில் பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு, பேரூராட்சி செயல் அலுவலர் ஜான் முகமது, சிங்கம்புணரி வணிகர் நல சங்க தலைவர் வாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தலின்படி இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை கடைப்பிடிப்பது, ஊரடங்கின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டது. கொரோனா பரவலை தடுக்க அரசு விதித்த விதிமுறைகள் மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதில் பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர்கள் தினகரன், மதியரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர

Next Story