கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு


கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு
x
தினத்தந்தி 21 April 2021 6:23 PM GMT (Updated: 21 April 2021 6:23 PM GMT)

சங்கராபுரம் ஊராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

காரைக்குடி,

சாக்கோட்டை யூனியனுக்குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சி பகுதியான பர்மா காலனி, பாண்டியன் நகர், போக்குவரத்து நகர் ஆகிய பகுதியில் கொரோனா பரவல் தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்னுச்சாமி தலைமையில் நடைபெற்றது. சங்கராபுரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் (பொறுப்பு) பாண்டியராஜன் கொரோனா பரவல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் பொது இடங்களில் செல்லும் நபர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும், அணியாமல் செல்பவர்களுக்கு அபராதமாக ரூ.200 விதிக்கப்படும் என்றும், பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களுக்கு ரூ.500அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதுதவிர கடைகள், வியாபாரம் நிறுவனங்களுக்கு சென்று அங்குள்ள உரிமையாளர்களிடம் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை போதிய சமூக இடைவெளியில் நிற்க அறிவுறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் கூறப்பட்டு மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Next Story