தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி


தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
x
தினத்தந்தி 21 April 2021 11:59 PM IST (Updated: 21 April 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

நொய்யல்
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறை சார்பில் தீ விபத்திலிருந்து பொது மக்களை எவ்வாறு காப்பாற்றுவது மற்றும் பொதுமக்கள் எவ்வாறு தப்பித்துக் கொள்வது என்பது குறித்த ஒத்திகை பயிற்சி நிலைய அலுவலர் திரு முருகன் தலைமையில் புகளூரில்நடைபெற்றது. அப்போது வீட்டில் சமையல் செய்யும் போது எண்ணெய் சட்டியில் திடீரென தீ பிடித்தால் எதைக் கொண்டு அணைக்க வேண்டும் என்பது குறித்தும், தீப்பிடித்து கொண்ட வீட்டில் சிக்கிக் கொண்டவர்களை எவ்வாறு மீட்பது, சமையல் கியாஸ் சிலிண்டரில் கியாஸ் லீக் ஆகி தீ பிடித்தால் எப்படி அணைப்பது, புகை சூழ்ந்த இடங்களில் இருந்து தப்பிப்பது எப்படி, அவர்களை காப்பாற்றுவது எப்படி என்பது குறித்தும் மற்றும் பல்வேறு விளக்கங்கள் குறித்து பல்வேறு செயல்முறைகளை செய்து காட்டினார்கள். அது சம்பந்தமாக விளக்க உரை ஆற்றினர்.

Next Story