வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பு-கலெக்டர் தகவல்
வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தை சுற்றி 1 கி.மீ. தூரம் பாதுகாக்காப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுவதாக கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.
சிவகங்கை,
வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தை சுற்றி 1 கி.மீ. தூரம் பாதுகாக்காப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுவதாக கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
பிரசித்தி பெற்ற வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்துக்கு பல்வேறு நாட்டுப்பறவைகள் வந்து செல்கின்றன. இந்த பறவைகள் அதிகளவில் வருகை தருவதற்கான இயற்கை சூழல் அமைத்து அந்தப்பகுதியில் அரசுத்துறைகள் மற்றும் பிற துறைகளின் புதிய திட்டப்பணிகள் மேற்கொள்ளும்போது பறவைகளின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு செயல்படும் வகையில் அரசு ஆணையிட்டுள்ளது. இதன்படி குழு ஒன்று அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது
அதன் அடிப்படையில் இந்த குழுவின் தலைவராக மாவட்ட கலெக்டரும் உறுப்பினர் செயலராக மாவட்ட வன அலுவலரும், உறுப்பினர்களாக தொண்டு நிறுவன அமைப்பு சார்பாக ஒருவரும், விலங்கியல் பாடத்திட்ட முதுநிலைப் பேராசிரியர் ஒருவரும், சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் ஒருவரும், மற்றும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு அலுவலர்களும் இருப்பார்கள்.
பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பு
மேலும் வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தை மையமாக வைத்து அதனைச்சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் பறவைகளின் பாதுகாப்பு நலன் கருதி எவ்வித புதிய திட்டப்பணிகளோ மற்றும் பறவைகளுக்கான அச்சுறுத்தல் ஏற்படும் வகையான பணிகளோ மேற்கொள்ளாத வண்ணம் பாதுகாக்கப்பட்டப்பகுதியாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஏதேனும் புதிய பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டால் மேற்கண்ட குழு ஒப்புதல் பெற்ற பின்னரே திட்டப்பணிகளை மேற்கொள்ளும் வகையில் அரசாணையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சாலை விரிவுப்படுத்தும் பணி
இந்த நிலையில் தற்போது திருப்பத்தூர் முதல் மேலூர் வரை மாநில நெடுஞ்சாலையில் விரிவாக்கப்பணி மேற்கொள்வதால் இச்சாலை வழியாக செல்ல உள்ளதால் மேற்கண்ட குழு ஒப்புதல் பெறுவதற்காக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இக்குழு மூலம் இப்பகுதி பொதுமக்கள் நலன் கருதியும், பறவைகள் சரணாலாயத்திற்கு பாதிப்பு இல்லாத வகையிலும் சாலை விரிவுபடுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள குழு ஆராய்ந்து அதற்கேற்ப ஆலோசனையின்படி பணிகளை மேற்கொள்ள உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
Related Tags :
Next Story