மோகனூர் அருகே சாக்கடை கால்வாயில் லாரி கவிழ்ந்தது


மோகனூர் அருகே சாக்கடை கால்வாயில் லாரி கவிழ்ந்தது
x
தினத்தந்தி 22 April 2021 12:25 AM IST (Updated: 22 April 2021 12:27 AM IST)
t-max-icont-min-icon

மோகனூர் அருகே சாக்கடை கால்வாயில் லாரி கவிழ்ந்தது.

மோகனூர்,

மோகனூர் அருகே மணப்பள்ளி பகுதியில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் கோழி லாரி ஒன்று பரமத்திவேலூரில் இருந்து மோகனூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் வந்த டிரைவர் உள்பட அனைவரும் காயங்கள் இன்றி உயிர் தப்பினர். இதையடுத்து விபத்துக்குள்ளான லாரி கிரேன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story