புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரேநாளில் 62 பேருக்கு கொரோனா


புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரேநாளில் 62 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 22 April 2021 12:32 AM IST (Updated: 22 April 2021 12:32 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரேநாளில் 62 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

புதுக்கோட்டை
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது.  புதுக்கோட்டை மாவட்டத்திலும் தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில் நேற்று ஒரேநாளில் 62 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 771 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 45 பேர் குணமடைந்ததால் நேற்று வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 49 ஆக உயர்ந்தது. கொரோனாவுக்கு தற்போது 562 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 160 ஆக உள்ளது.


Next Story