அரிமளம் அருகே கத்தியால் குத்தப்பட்டவர் சாவு


அரிமளம் அருகே கத்தியால் குத்தப்பட்டவர் சாவு
x
தினத்தந்தி 22 April 2021 12:37 AM IST (Updated: 22 April 2021 12:37 AM IST)
t-max-icont-min-icon

அரிமளம் அருகே கத்தியால் குத்தப்பட்டவர் உயிரிழந்தார்.

அரிமளம்
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள ராயவரம் வாசுகிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(வயது 27). கூலித்தொழிலாளியான இவர், அதே கிராமத்தை சேர்ந்த கணேசன் (47) என்பவருக்கு கடன் கொடுத்திருந்தார். கடந்த 16-ந் தேதி இரவு சந்தோஷ்குமாரும், கணேசனும் மது அருந்திக் கொண்டு இருந்தனர். அப்போது சந்தோஷ்குமார், தான் கொடுத்த கடனை கணேசனிடம் திருப்பி கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சந்தோஷ்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கணேசனை குத்தினார். இதில் பலத்த காயமடைந்த கணேசன், சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார். இதுகுறித்து ஏற்கனவே அரிமளம் போலீசில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது கணசேன் இறந்து விட்டதால் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story