தொழிலில் நஷ்டத்தால் ஜெராக்ஸ் கடைக்காரர் தற்கொலை


தொழிலில் நஷ்டத்தால் ஜெராக்ஸ் கடைக்காரர் தற்கொலை
x
தினத்தந்தி 22 April 2021 12:39 AM IST (Updated: 22 April 2021 12:39 AM IST)
t-max-icont-min-icon

தொழிலில் நஷ்டத்தால் ஜெராக்ஸ் கடைக்காரர் தற்கொலை செய்து கொண்டார்.

சிவகாசி, ஏப்
சிவகாசி அருகே உள்ள மாரனேரியை சேர்ந்தவர் மதன்குமார் (வயது 31). இவர் அதே பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு அவரது மனைவி உறவினர் வீட்டிற்கு சென்று விட்டாராம். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மதன் குமார் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story