நாம் தமிழர் கட்சி நிர்வாகி தாக்கப்பட்டதை கண்டித்து சாலை மறியல்


நாம் தமிழர் கட்சி நிர்வாகி தாக்கப்பட்டதை கண்டித்து சாலை மறியல்
x
தினத்தந்தி 22 April 2021 12:45 AM IST (Updated: 22 April 2021 12:45 AM IST)
t-max-icont-min-icon

நாம் தமிழர் கட்சி நிர்வாகி தாக்கப்பட்டதை கண்டித்து கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆவுடையார்கோவில்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலை அடுத்த பெருங்காடு பகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பரத் என்பவரை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தாக்கினர். இதில், பலத்த காயம் அடைந்த அவர் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த நாம் தமிழர் கட்சியினர் அறந்தாங்கி அரசு மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயசீலன், அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. நாம் தமிழர் கட்சி நிர்வாகி தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story