உண்டியல் எண்ணிக்கை


உண்டியல் எண்ணிக்கை
x
தினத்தந்தி 21 April 2021 8:37 PM GMT (Updated: 21 April 2021 8:37 PM GMT)

திருப்பரங்குன்றம் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது

திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 35 நிரந்தர உண்டியல்கள் உள்ளன. கோவிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறும் பட்சத்தில் வெள்ளி, தங்க பொருட்கள் மற்றும் பணம்காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். உண்டியலை யாவும் நிரம்பியதும் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த மாதத்திற்கான உண்டியல்கள் திறப்புநேற்று நடைபெற்றது.
கோவில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி, கள்ளழகர் கோவில் துணை கமிஷனரும், உண்டியல் கண்காணிப்பு அலுவலருமான அனிதா ஆகியோர் முன்னிலையில் கோவில் பணியாளர்கள், அய்யப்ப சேவா சங்கத்தினர், வேத சிவாகம் பாடசாலை மாணவர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
உண்டியல்கள் மூலமாக 22 லட்சத்து 62 ஆயிரத்து 217 ரூபாய் ரொக்கமாக கிடைத்தது. மேலும் 120 கிராம் தங்கம், 1500 கிராம் வெள்ளியும் கிடைத்தது. உண்டியல்கள் எண்ணும் பணியில் திருப்பரங்குன்றம் சரக ஆய்வர் செல்வம், தக்கார் பிரதிநிதி நாகவேல் மற்றும் கோவில் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story