திசையன்விளையில் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்


திசையன்விளையில் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 22 April 2021 2:24 AM IST (Updated: 22 April 2021 2:24 AM IST)
t-max-icont-min-icon

திசையன்விளையில் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் மீன் வாங்க பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திசையன்விளை:
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டம் திசையன்விளை தாலுகாவில் தாசில்தார் ரகுமத்துல்லா மற்றும் போலீசார் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். முககவசம் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதித்து வசூலித்து வருகிறார்கள். 

தற்போது மீன்பிடி தடைகாலம் என்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்கவில்லை. இதனால் திசையன்விளை மார்க்கெட்டுக்கு மீன் வரத்து குறைந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் விசைப்படகு மீன்பிடி தொழில் கிடையாது. இங்கு நாட்டு படகு மூலம் மீன்  பிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கடற்கரை கிராமங்களான உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, இடிந்தகரை, கூத்தன்குழி உள்ளிட்ட கிராமங்களில் நாட்டுப்படகு மூலம் மீன்பிடி தொழில் நடந்து வருகிறது. இங்கு கிடைக்கும் மீன்கள் திசையன்விளை மீன் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. மீன்களை வாங்கி செல்ல மக்கள் கூட்டம் அலைமோதியது. சிலர் நடைபாதையில் வைத்து மீன்களை விற்பனை செய்வதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.மார்க்கெட்டில் மீன்கள் வாங்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி குவிந்ததால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு நிலவுகிறது. எனவே பொதுமக்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story