திசையன்விளையில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
திசையன்விளையில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திசையன்விளை:
தினசயன்விளை போலீசார் நேற்று திசையன்விளை காமராஜர் சிலை அருகில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது முககவசம் அணியாமல் வந்த 21 பேரிடம் இருந்து தலா ரூ.200 அபராதம் வசூலித்தனர்.
இதேபோல் திசையன்விளை தாசில்தார் ரகுமத்துல்லா, சமுக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் சுப்புராயல், வருவாய் ஆய்வாளர் துரைசாமி ஆகியோர் சமுக இடைவெளியை கடைபிடிக்காத வியாபாரிகள் 3 பேரிடம் தலா ரூ.500-ம், முககவசம் அணியாத 5 பேரிடம் தலா ரூ.200-ம் அபராதம் வசூலித்தனர். உவரி போலீசார் அந்த பகுதியில் முககவசம் அணியாமல் வந்த 20 பேரிடம் இருந்து அபராதம் வசூலித்தனர்.
Related Tags :
Next Story