காவிரி ஆற்றில் தண்ணீர் தெரியாத அளவுக்கு மூடிய ஆகாயத்தாமரை மைதானம் போல் காட்சி அளிக்கிறது
ஈரோடு காவிரி ஆற்றில் தண்ணீர் தெரியாத அளவுக்கு ஆகாயத்தாமரை மூடி காவிரி ஆறு மைதானம் போல் காட்சி அளிக்கிறது.
ஈரோடு காவிரி ஆற்றில் தண்ணீர் தெரியாத அளவுக்கு ஆகாயத்தாமரை மூடி காவிரி ஆறு மைதானம் போல் காட்சி அளிக்கிறது.
காவிரி ஆறு
ஈரோடு கருங்கல்பாளையத்துக்கும், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் காவிரி ஆறு உள்ளது. வெண்டிபாளையம் கட்டளை கதவணையில் மின் உற்பத்திக்காக தண்ணீர் தேக்கப்படும்போது கருங்கல்பாளையம் பகுதி வரை தண்ணீர் தேங்கி கடல்போன்று அழகாக காட்சி அளிக்கும். காவிரி ஆறு பிரமாண்டமாக காட்சி அளிப்பதை பார்க்க ஏராளமானவர்கள் கருங்கல்பாளையத்துக்கு வருகிறார்கள்.
இதுபோல் அமாவாசை நாட்களில் திதி கொடுக்கவும், இறுதி சடங்குகள் நிறைவேற்றியவர்கள் காவிரியில் புனித நீராடவும் இங்கு வருவது உண்டு. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களின் திருவிழாக்களுக்கு புனித நீர் எடுக்கவும் பக்தர்கள் கருங்கல்பாளையம் காவிரி ஆற்றுக்கு வந்து செல்கிறார்கள்.
ஆகாயத்தாமரை
இங்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இறங்க வசதியாக படிக்கட்டுகள் அமைக்கப்படவில்லை. இதனால் மிகவும் சிரமப்பட்டு ஆற்றில் இறங்குவார்கள். இந்தநிலையில் காவிரி ஆற்றில் ஆகாயத்தாமரை பாசிகள் அதிகமாக வளர்ந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. தொடக்கத்திலேயே ஆகாயத்தாமரையை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இப்போது காவிரி ஆற்று தண்ணீரை மறைக்கும் அளவுக்கு ஆகாயத்தாமரை வளர்ந்து பரந்து விரிந்து கிடக்கிறது. திடீர் என்று பார்த்தால் மிகப்பெரிய விளையாட்டு மைதானத்தில் புல் வளர்ந்து இருப்பதுபோல காவிரி ஆறு காட்சி அளிக்கிறது.
ஆகாயத்தாமரை அதிக நீர் இழப்பு செய்யக்கூடிய பாசி வகையாகும். இது வளர்ந்து வருவதால் ஆற்றில் மீன்வளம் குறையும். கழிவுகள் தேங்கி தண்ணீரை மாசுப்படுத்தும். எனவே காவிரி ஆற்றில் வளர்ந்து வரும் ஆகாயத்தாமரைகளை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story