நெல்லையில் போலீஸ் அதிகாரி உள்பட 426 பேருக்கு கொரோனா


நெல்லையில் போலீஸ் அதிகாரி உள்பட 426 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 22 April 2021 2:38 AM IST (Updated: 22 April 2021 2:38 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் போலீஸ் அதிகாரி உள்பட 42்6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று போலீஸ் அதிகாரி ஒருவர், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணியாற்றிய ஊழியர்கள் உள்பட 426 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அவர்கள் பணியாற்றிய இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அவர்களுடன் பணியாற்றியவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்றுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 19 ஆயிரத்து 327 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 16 ஆயிரத்து 814 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் நேற்று மட்டும் 75 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 2 ஆயிரத்து 287 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று 70 வயது முதியவர் ஒருவர் இறந்தார். இதுவரை 226 பேர் இறந்துள்ளனர். 

Next Story