இரவு நேர ஊரடங்கால் அரியலூர் மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடின
இரவு நேர ஊரடங்கால் அரியலூர் மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
அரியலூர்:
வெறிச்சோடின
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நேற்று முன்தினம் முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும் என்பதால் அரியலூர் மாவட்டத்தில் இரவு 9 மணிக்கு மேல் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடின. மேலும் இரவு 9 மணிக்கு மேல் அரியலூர் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. பெரம்பலூர் செல்ல வேண்டிய ஒரு முதியவர் பஸ் இல்லாததால் பிளாட்பாரத்தில் படுத்து தூங்கினார். இதேபோல் ஜெயங்கொண்டம், செந்துறை, திட்டகுடி, பெரம்பலூர், தஞ்சாவூர் நகரங்களுக்கு செல்ல வேண்டிய பயணிகள் பஸ்கள் இயக்கப்படாததால் சிரமப்பட்டனர். சிலர் பஸ் நிலையத்தில் தங்கினார்கள்.
ஜெயங்கொண்டம் நகர பகுதிகளில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் வணிகர்கள் தாமாக முன்வந்து இரவு 8 மணிக்கே பெரும்பாலான கடைகள் அடைத்தனர். இதனால் முக்கிய வீதிகள், கடைவீதி, 4 ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகள் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது. ஜெயங்கொண்டம் போலீசார் கடைவீதி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதோடு, ரோந்து வாகனத்தில் ரோந்து சென்றும் கண்காணித்தனர்.
Related Tags :
Next Story