ஆலமரம் வெட்டப்பட்டதை கண்டித்து சாலை மறியல்
பொய்யூரில் ஆலமரம் வெட்டப்பட்டதை கண்டித்து இளைஞர்கள் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கீழப்பழுவூர்:
சாலை மறியல்
அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தில் இருந்து கிருஷ்ணாபுரம் செல்லும் சாலையின் இடையே பல ஆண்டுகள் பழமையான ஆலமரம் உள்ளது. அந்த மரம், அந்த வழியாக செல்லும் மின் கம்பிகளுக்கு இடையூறாக இருப்பதாக கூறி, நேற்று அந்த மரக்கிளைகளை மின்வாரியத்தினர் வெட்டினர்.
இதையடுத்து அப்துல்கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளையை சேர்ந்தவர்கள், அந்த ஆலமரத்தை வெட்டியதற்கு கண்டனம் தெரிவித்து ஆலமரத்தின் அருகிலேயே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், மரங்களை பாதுகாக்க வேண்டிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு இளைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் மறியலால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story