கடன் தொல்லையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை


சசிகலா
x
சசிகலா
தினத்தந்தி 22 April 2021 2:40 AM IST (Updated: 22 April 2021 2:40 AM IST)
t-max-icont-min-icon

வி.கைகாட்டி அருகே கடன் தொல்லையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வி.கைகாட்டி:

தட்டச்சர்
அரியலூர் அருகே உள்ள கயர்லாபாத் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன். இவரது மனைவி சசிகலா(வயது 35). கொளஞ்சிநாதன் சென்னையில் வெல்டிங் வேலை பார்த்து வருகிறார். சசிகலா, அரியலூர் கோர்ட்டு பகுதியில் உள்ள ஒரு வக்கீல் அலுவலகத்தில் தட்டச்சராக வேலை செய்து வந்தார். இந்த தம்பதிக்கு அபர்ணா என்ற மகளும், தினேஷ் என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் சசிகலா, ஒரு பெண்ணிடம் கடன் வாங்கியிருந்ததாகவும், நேற்று முன்தினம் இரவு கடன் கொடுத்த பெண்ணும், அவரது மகனும் கொடுத்த கடனை கேட்டு சசிகலா வீட்டு வாசலிலேயே உட்கார்ந்து இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றதாக தெரிகிறது.
தற்கொலை
இதனால் மன உளைச்சலில் இருந்த சசிகலா, நேற்று காலை வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கயர்லாபாத் போலீசார், சசிகலாவின் உடலை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லையால் பெண் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story