புளியங்குடியில் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் திருட்டு


புளியங்குடியில் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் திருட்டு
x
தினத்தந்தி 22 April 2021 3:03 AM IST (Updated: 22 April 2021 3:03 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடியில் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

புளியங்குடி:
புளியங்குடி அருகே பாம்புக்கோவில் சந்தை ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் ஊழியர்கள் வழக்கம்போல் கடையை அடைத்து விட்டு சென்றுவிட்டனர். நேற்று காலை டாஸ்மாக் கடை கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. 

இதுகுறித்து உடனடியாக புளியங்குடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன், சப்-இன்ஸ்பெக்டர்கள் காசிவிசுவநாதன், தினேஷ் பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது கடையில் இருந்த சுமார் ரூ.48 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருட்டுபோனது தெரியவந்தது. 

இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் டாஸ்மாக் கடையின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, மதுபான பாட்டில்களை திருடிச் சென்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.



Next Story