வாட்ஸ் அப்பில் ஆபாச படம் அனுப்பி, தொல்லை கொடுக்கும் வாலிபர் மீது நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டிடம் கல்லூரி மாணவி புகார் மனு
வாட்ஸ் அப்பில் ஆபாச படம் அனுப்பி தொல்லை கொடுக்கும் வாலிபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கல்லூரி மாணவி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்தார்.
வாட்ஸ் அப்பில் ஆபாச படம் அனுப்பி தொல்லை கொடுக்கும் வாலிபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கல்லூரி மாணவி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்தார்.
ஆபாச படம்
பெருந்துறை பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரியில் படிக்கும் 21 வயது மாணவி நேற்று ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-
ஈங்கூர் கவுண்டனூர் பகுதியை சேர்ந்த சென்னியப்பனின் மகன் மணிகண்டன் (வயது 27) என்பவர், எனது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பல தொல்லைகள் கொடுத்து வந்தார். எனது வாட்ஸ் அப்புக்கு ஆபாச படங்களை அனுப்பியும், வீடியோ கால் மூலமாக பேசியும் தொல்லை கொடுத்து வந்தார்.
கொலை மிரட்டல்
மேலும் மணிகண்டன் நான் படிக்கும் கல்லூரி நுழைவு வாயிலுக்கு வந்து நின்று கொண்டு, அவரிடம் பேசாவிட்டால் கல்லூரிக்குள் நுழைந்து படிப்பையும், வாழ்க்கையையும் கெடுத்து விடுவதாகவும், என்னை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தார்.
இதைத்தொடர்ந்து நான் இதுபற்றி என் பெற்றோரிடம் தெரிவித்தேன். இதற்கிடையில் கடந்த 18-ந்தேதி எனது கல்லூரி முன்பு மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் நின்றிருந்தனர். அப்போது எனது பெற்றோர் மணிகண்டனை மடக்கி பிடித்து, சென்னிமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
உயிருக்கு பாதுகாப்பு
இதைத்தொடர்ந்து மணிகண்டனின் பெற்றோரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலீஸ் நிலையத்தின் வளாகத்தில் மணிகண்டனின் தம்பி தாமோதரன், தந்தை சென்னியப்பன், அம்மா ரத்தினாள் மற்றும் உறவினர்கள் எனது தாய்மாமாவை ஹெல்மெட்டால் தாக்கினர்.
மணிகண்டனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தையும் உள்ளது. எனவே, எனக்கு தொல்லை கொடுத்த மணிகண்டன், உறவினர்களை தாக்கிய அவரது குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எங்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.
Related Tags :
Next Story