ஈரோடு மாவட்டத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 284 பேருக்கு கொரோனா தொற்று சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு
ஈரோடு மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் புதிதாக 284 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் புதிதாக 284 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
புதிய உச்சம்
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. கடந்த மாதம் வரை கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ் இந்த மாதம் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக கடந்த 4 நாட்களாக புதிய உச்சமாக 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
284 பேருக்கு கொரோனா
இந்த நிலையில் நேற்று புதிய உச்சமாக ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் புதிதாக 284 பேருக்கு கொரோனா தெற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 651 ஆக உயர்ந்தது.
இதற்கிடையில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 87 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர்.
1,552 பேர் சிகிச்சை
மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 15 ஆயிரத்து 947 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரசுக்கு இதுவரை 152 பேர் பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 1,552 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story