கொண்டலாம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் சாவு
கிணற்றில் தவறி விழுந்த முதியவர் சாவு
கொண்டலாம்பட்டி:
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள வேடுகாத்தாம்பட்டி பகுதி சங்கு ஊதி வட்டத்தைச் சேர்ந்தவர் புத்திரகவுண்டர் (வயது 84). இவர் அந்த பகுதியில் உள்ள முனியப்பன் கோவிலுக்கு தினந்தோறும் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி காலை வழக்கம் போல் முனியப்பன் கோவிலுக்கு சென்ற புத்திரகவுண்டர் வீட்டிற்கு வரவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் நேற்று காலை அதே பகுதியில் உள்ள ரமேஷ் என்பவரின் தோட்டத்து கிணற்றில் புத்திரக்கவுண்டர் உடல் மிதப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் சேலம் சூரமங்கலம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் புத்திரகவுண்டரின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். போலீசாரின் விசாரணையில் கிணற்று பகுதிக்கு சென்ற முதியவர் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.
Related Tags :
Next Story