சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
சேலம்:
ராமநவமி விழாவையொட்டி சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 10 மணிக்கு மூலவர் பெருமாளுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து பூஜைகள் செய்யப்பட்டன. மேலும், கோவில் வளாகத்தில் ராமர், சீதை மற்றும் லட்சுமணனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. கொரோனா பரவல் காரணமாக முககவசம் அணிந்து வந்த பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் அனைவரும் சமூக இடைவெளியுடன் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும், கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதேபோல், சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று ராமநவமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
Related Tags :
Next Story