சிகரம் தொட்ட சிங்கப்பெண் பிரியங்கா மங்கேஷ்


சிகரம் தொட்ட சிங்கப்பெண் பிரியங்கா மங்கேஷ்
x
தினத்தந்தி 22 April 2021 11:10 AM IST (Updated: 22 April 2021 11:10 AM IST)
t-max-icont-min-icon

உலகின் மிகவும் ஆபத்தான அன்னபூர்ணா மலையில் பலர் ஏற முயன்று பாதியிலேயே தங்களுடைய முயற்சியை கைவிட்டு உள்ளனர்.

மும்பை, 

சத்தாராவை சேர்ந்த பெண் பிரியங்கா மங்கேஷ் மோகித். 28 வயதான இவர் சிறு வயதிலிருந்தே மலையேறுவதில் ஆர்வம் கொண்டவராக திகழ்ந்தார். இந்நிலையில் கடந்த 16-ந் தேதி நேபாளத்தில் உள்ள 8 ஆயிரத்து 91 மீட்டர் உயரம் கொண்ட உலகின் 10-வது மிகப்பெரிய மலை சிகரமான அன்னபூர்ணா சிகரத்தில் ஏறிய முதல் பெண் என்ற சாதனையை படைத்துள்ளார்.

உலகின் மிகவும் ஆபத்தான அன்னபூர்ணா மலையில் பலர் ஏற முயன்று பாதியிலேயே தங்களுடைய முயற்சியை கைவிட்டு உள்ளனர். இந்த மலையில் இதுவரை ஏற முயன்று 40 பேர் உயிரிழந்து உள்ளனர்.

6 இந்தியர்கள் மட்டுமே அன்னபூர்ணா சிகரத்தில் ஏறியுள்ளனர். அவர்கள் அனைவரும் ஆண்கள் ஆவர். இந்தநிலையில் அன்னபூர்ணா சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண் என்ற சாதனையை பிரியங்கா படைத்துள்ளார்.

பிரியங்கா ஏற்கனவே கடந்த 2013-ம் ஆண்டு உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட்டிலும், 2018-ம் ஆணடில் லோட்சே மலைசிகரத்தலும், மக்காலு, கிரிமாஞ்சாரோ ஆகிய சிகாரங்களில் 2016-ம் ஆண்டும் ஏறி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பித்தக்கது.

Next Story