வடக்கு திட்டங்குளத்தில் காய்ச்சல் கண்டறியும் முகாம்
வடக்கு திட்டங்குளத்தில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடந்தது.
கோவில்பட்டி:
கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த, கோவில்பட்டி சுகாதார மாவட்டத்திலுள்ள 36 கிராமங்களில் நேற்று காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அறிவித்திருந்தார்.
இதன்படி கோவில்பட்டியை அடுத்துள்ள வடக்கு திட்டங்குளம் கிராமத்திலுள்ள பஞ்சாயத்து தொடக்கப்பள்ளியில் நேற்று காய்ச்சல் கண்டறியும் முகாம் நடந்தது. கீழ ஈரால் நடமாடும் மருத்துவமனை சார்பில் டாக்டர் கார்த்திக் தலைமையிலான மருத்துவ குழுவினர் கிராம மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை நடத்தினா். இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 40 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை செய்த அனைவருக்கும் காய்ச்சல் இல்லை என்று டாக்டர்் தெரிவித்தார்.
Related Tags :
Next Story