போளூர் அருகே 10 ஏக்கர் கிடங்கில் மணல் பதுக்கி விற்பனை. தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் உள்பட 6 பேர் கைது
போளூர் அருகே 10 ஏக்கர் பரப்பளவு கிடங்கில் மணல் பதுக்கி விற்று வந்த சேத்துப்பட்டு தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
போளூர்
கடத்தல் மணலை மறைக்க எம்.சாண்ட் தூவும் யுக்தி
போளூரை அடுத்த கரிக்காத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 46) சேத்துப்பட்டு தி.மு.க. ஒன்றிய கவுன்சிலரான இவர் ரியல் எஸ்டேட் மற்றும் புதிதாக வீடுகள் கட்டி விற்பது போன்ற தொழில் செய்து வருகிறார். இவர், கட்டுமானப் பணிகளுக்காக செய்யாற்றின் கரையோரம் உள்ள ஒருசிலரின் நிலங்களை கிரயம் செய்து, அந்த நிலங்களை தோண்டி, அதில் அனுமதியின்றி மணல் எடுத்துப் பயன்படுத்துவதும், வெளியில் கடத்துவதுமாக இருந்து வந்தார்.
முருகாபாடி அருகில் 10 ஏக்கர் பரப்பளவில் கிடங்கு அமைத்துள்ளார். அங்கு, மணலை மலைபோல் கொட்டி குவித்து பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. குடோனில் குவித்து வைத்துள்ள மணலை பார்ப்போருக்கு மணல் என்று தெரியாமல் இருப்பதற்காகவும், கடத்தல் மணல் என யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காகவும் ஒரு யுக்தியை ைகயாண்டு மணல் மீது லேசாக எம்.சாண்ட் தூவி விட்டு மணல் கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.
6 பேர் கைது
இதுகுறித்து திருவண்ணாமலை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர் 10 பேர் கொண்ட சிறப்பு டெல்டா படை போலீசார் நேற்று முன்தினம் இரவு திடீரென கோவிந்தசாமியின் கிடங்குக்குச் சென்று அதிரடி சோதனை நடத்தினர். அந்த நேரத்தில் 3 டிராக்டர்கள், ஒரு மினிலாரியில் பொக்லைன் எந்திரம் மூலம் மணலை ஏற்றி, அதன் மீது சந்தேகம் வராமல் இருப்பதற்காக எம்.சாண்ட்டை தூவி விட்டு கிடங்கில் இருந்து வெளிேய வந்து கொண்டிருந்தது.
அந்த வாகனங்களை டெல்டா படை போலீசார் மடக்கினர். வாகனங்களை ஓட்டி வந்த பாக்மார்பேட்டைையச் சேர்ந்த ராமலிங்கம் (38), ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரமணா (32), கரிக்காத்தூரை சேர்ந்த பாலாஜி (29), ராஜேந்திரன் (45), குடோன் உரிமையாளர் கோவிந்தசாமி மற்றும் 18 வயது மதிக்கத்தக்க ஒருவர் என 6 ேபரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 106 யூனிட் மணலுடன் 3 டிராக்டர்கள், ஒரு மினி லாரி, பொக்லைன் எந்திரம் என 5 வாகனங்களை பறிமுதல் செய்து, போளூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மணல் பதுக்கல் குடோனுக்கு தாசில்தாா் சீல் ைவத்தார்.
சிறுவர் சீர்திருத்தபள்ளி
இது குறித்து தாசில்தார் சாப்ஜான் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, 6 பேரை போளூர் ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். அவரின் உத்தரவுப்படி 5 பேரை 15 நாள் காவலில் வைக்க திருவண்ணாமலைக்கும், 18 வயது நபரை கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கும் போலீசார் அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story