டெக்னோ ஸ்பார்க் 7
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள டிரான்சியோன் நிறுவனம் புதிதாக டெக்னோ ஸ்பார்க் 7 என்ற பெயரிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
இது 6.52 அங்குல ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்டது. இதில் 2 கிகா ஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியா டெக் ஹீலியோ ஏ 25 பிராசஸர் உள்ளது. இதன் பின்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. விரல் ரேகை உணர் சென்சாரும் பின்புறம் உள்ளது.
நீண்ட நேரம் செயல்பட வசதியாக இதில் 6 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன் படுத்தப்பட்டுள்ளது. 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. நினைவகம், 3 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்டதாக இரண்டு மாடல்கள் வந்துள்ளன. இவற்றின் நினைவகத் திறனை 256 ஜி.பி. வரை விரிவாக்கம் செய்ய முடியும்.
இதில் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் பயன்படுத்தப் பட்டுள்ளது. செல்பி பிரியர்களின் வசதிக்காக முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது.
2 ஜி.பி. ரேம் உள்ள மாடலின் விலை சுமார் ரூ.6,999. 3 ஜி.பி. ரேம் உள்ள மாடலின் விலை சுமார் ரூ.7,999.
Related Tags :
Next Story