ஆற்காட்டில் கொரோனா தடுப்பு விதிமுறைைய பின்பற்றாதவர்களுக்கு அபராதம்
ஆற்காட்டில் கொரோனா தடுப்பு விதிமுறைைய பின்பற்றாதவர்களுக்கு அபராதம்
ஆற்காடு
ஆற்காடு பகுதியில் கொரோனா ெதாற்று பரவலை கட்டுப்படுத்த அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், கிருமிநசினி பயன்படுத்துதல் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என அரசு வலியுறுத்தி உள்ளது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர். அபராதம் விதிக்கும்போது அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் நபர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கைப்படுகிறது.
நேற்று ஆற்காட்டில் உள்ள கண்ணமங்கலம் கூட்ரோடு பகுதியில் தாசில்தார் காமாட்சி தலைமையில் அதிகாரிகள் கொரோனா பரவல் தடுப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக நடந்து வந்தவர்கள், மோட்டார் சைக்கிள், பஸ், லாரி ஆகியவற்றில் வந்தவர்கள் முகக் கவசம் அணிந்துள்ளனரா? எனக் கண்காணித்தனர். அப்போது கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் மீறி வந்தவர்களுக்கு அபராதம் விதித்து, மொத்தம் ரூ.3 ஆயிரத்து 700 வசூலிக்கப்பட்டது.
Related Tags :
Next Story