விபத்தில் காய்கறி வியாபாரி பலி


விபத்தில் காய்கறி வியாபாரி பலி
x
தினத்தந்தி 22 April 2021 7:02 PM IST (Updated: 22 April 2021 7:02 PM IST)
t-max-icont-min-icon

விபத்தில் காய்கறி வியாபாரி பலியானார்.

ராமநாதபுரம்,ஏப்
ராமநாதபுரத்தை அடுத்துள்ள உத்தரகோசமங்கை அருகே உள்ள களரி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி மகன் காளீஸ்வரன் (வயது 25). அந்தமானில் காய்கறி விற்பனை செய்து வந்தார். இவர் தனது சகோதரரின் திருமணத்திற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். நேற்று முன் தினம் மோட்டார் சைக்கிளில் காளீஸ்வரன் ராமநாதபுரம் வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். 
வித்தானூர் கிராமம் செங்காருடைய அய்யனார் கோவில் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் மூளை சிதறி காளீஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சரக்கு வாகன டிரைவர் கே.கொடிக்குளத்தை சேர்ந்த  கண்ணனை (40) கைது செய்தனர்.

Next Story