15 பேருக்கு கொரோனா
15 பேருக்கு கொரோனா
வெள்ளகோவில்
வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் தினசரி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மாதம் 18ந்தேதி 61 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 6 ஆண்களுக்கும், 3 பெண்களுக்கும் மொத்தம் 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி ஈரோடு மற்றும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் வெள்ள கோவில் பகுதியை சேர்ந்த 2 பெண்கள், உட்பட 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
தற்போது வெள்ளகோவில் பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் நேற்று வெள்ளகோவில் அருகே உள்ள கரட்டுபாளையத்தில் ஒரு நூல் மில்லில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கொரோனா விதி முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்று கண்காணித்த போது கொரோனா விதிமுறைகள் கடைப்பிடிக்காத காரணத்தால் பொது சுகாதார சட்டத்தின்கீழ் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
=========
Related Tags :
Next Story