அரசியல் கட்சியினர் ஆலோசனை கூட்டம்
அரசியல் கட்சியினர் ஆலோசனை கூட்டம்
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிவடைந்துள்ளது. மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, தெற்கு, அவினாசி, பல்லடம், காங்கேயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் அனைத்தும், வாக்கு எண்ணும் மையமான பல்லடம் ரோட்டில் உள்ள எல்.ஆர்.ஜி. கலைக்கல்லூரியில் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குகள் வருகிற 2ந் தேதி எண்ணப்பட இருக்கின்றன.
இதனால் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினருடனான ஆலோசனை கூட்டம் திருப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. ஜெகநாதன் தலைமையில் நடந்தது. இதில் வாக்கு எண்ணும் மைய முகவர், தலைமை முகவர், வாக்கு எண்ணிக்கை முகவர் நியமனம் குறித்தும், அவ்வாறு நியமனம் செய்யப்படுகிறவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது. இதில் வடக்கு தாசில்தார் ஜெகநாதன் மற்றும் வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story