சாக்கடை கழிவுகள் அகற்றம்


சாக்கடை கழிவுகள் அகற்றம்
x
தினத்தந்தி 22 April 2021 7:35 PM IST (Updated: 22 April 2021 7:35 PM IST)
t-max-icont-min-icon

சாக்கடை கழிவுகள் அகற்றம்

வீரபாண்டி
திருப்பூர் வீரபாண்டி பகுதிக்கு உட்பட்ட நொச்சிபாளையம் பிரிவு மூலக்கடை பகுதியில் கடந்த ஒரு வருடமாக சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டு குப்பைகளும், பிளாஸ்டிக் கழிவுகளும் தேக்கமடைந்து துர்நாற்றம் வீசி வந்தது. இதனால் அப்பகுதியில்  நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டது. 
இந்த கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இது குறித்து ‘தினத்தந்தி’ யில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக மாநகராட்சி ஊழியர்கள் அப்பகுதியில் சாக்கடை கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

Next Story