கோத்தகிரியில் சுகாதார பணியாளர்களுக்கு சீருடை வினியோகம்


கோத்தகிரியில் சுகாதார பணியாளர்களுக்கு சீருடை வினியோகம்
x
தினத்தந்தி 22 April 2021 7:42 PM IST (Updated: 22 April 2021 7:48 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி பேரூராட்சியில் சுகாதார பணியாளர்களுக்கு சீருடை வினியோகம் செய்யப்பட்டது.

கோத்தகிரி,

கோத்தகிரி பேரூராட்சியில் சுமார் 35 நிரந்தர சுகாதார பணியாளர்கள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட தற்காலிக தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பேரூராட்சியில் பணி புரிந்து வரும் நிரந்தர சுகாதார பணியாளர்களுக்கு ஆண்டு தோறும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 2 ஜோடி சீருடைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. 

இவர்களுக்கு இந்த ஆண்டிற்கான சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், கோத்தகிரி செயல் அலுவலர் மணிகண்டன் மற்றும் சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டு சுகாதாரப் பணியாளர்களுக்கு சீருடைகளை வழங்கினர்.

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கிருமி நாசினி மருந்து தெளித்தல், முழு சுகாதார பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சுகாதார பணியாளர்கள் மற்றும் தூய்மைகாவலர்கள் அனைவருக்கும் முழு கவச உடை, முகக்கவசம், கையுறை மற்றும் காலணிகள் ஆகியவையும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story