எட்டயபுரத்தில் கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம்


எட்டயபுரத்தில் கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 22 April 2021 7:42 PM IST (Updated: 22 April 2021 7:42 PM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரத்தில் கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.

எட்டயபுரம்:
எட்டயபுரம் வர்த்தகர்கள் சங்கம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், ஊரடங்கு காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் சமுதாய நலக்கூடத்தில்  நடந்தது.
கூட்டத்திற்கு எட்டயபுரம் தாசில்தார் அய்யப்பன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், வர்த்தகர்கள் சங்க தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் ஊரடங்கின் போது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னாபீர்முகமது பேசினார். மேலும் வணிக நிறுவனங்களுக்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுதல், முக கவசம் அணிவித்து வருதல், சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் சங்க கவுரவ ஆலோசகர் வெங்கட்டசுப்பிரமணியன், குமாஸ்தா அய்யனார், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் வெற்றி வேல் முருகன் மற்றும் வர்த்தகர்கள் பலர் கலந்து கொண்டனர். வர்த்தகர்கள் சங்க பொருளாளர் பரமசிவம் நன்றி கூறினார்.

Next Story