பொள்ளாச்சி அருகே கொப்பரை தேங்காய் ஏலம்
பொள்ளாச்சி அருகே ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கிபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதற்கு கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஏலத்திற்கு பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 13 விவசாயிகள் கொப்பரை தேங்காய்களை கொண்டு வந்திருந்தனர்.
6 வியாபாரிகள் ஏலம் எடுத்தனர். கொப்பரை தேங்காய்கள் தரம் பிரித்து ஏலம் விடப்பட்டது. அதன்படி 19 மூட்டை முதல் தர கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.115.97 முதல் ரூ.120.97 வரையும், 17 மூட்டை 2-ம் தர கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.98.69 முதல் ரூ.110.97 வரையும் ஏலம் போனது.
கடந்த வாரத்தை விட 16 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்து குறைவாக இருந்தது. இதன் காரணமாக கடந்த வாரத்தை விட கிலோவுக்கு ரூ.3.82 விலை அதிகரித்து இருந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story