கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்
கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
நெகமம்,
கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் செட்டியக்காபாளையம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
முன்னதாக தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முகாமில் 23 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் மருத்துவ அலுவலர் டாக்டர் சித்ரா, டாக்டர் அருண்பிரகாஷ், வட்டார விரிவாக்க கல்வியாளர் ஜோதிமணி, செவிலியர் அபிராமி ஆகியோர் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story