கொரோனா பரவலை தடுக்க கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம்
கொரோனா பரவலை தடுக்க கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
தேனி:
தேனி மாவட்ட போலீஸ் துறை மற்றும் தேனி நாடார் சரசுவதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி இணைந்து கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையத்தில் நேற்று கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. இதற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை பொதுச்செயலாளர் ராஜமோகன் தலைமை தாங்கினார். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கரன் கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். மேளதாளம் இசைத்தும், எமதர்மராஜா மற்றும் கொரோனா வைரஸ் வேடமிட்டு நாடகம் நடித்தும், கிராமிய பாடல்கள் பாடியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த கலைநிகழ்ச்சிகளில் கல்லூரி மாணவர்கள், கோடாங்கி கலைக்குழுவினர் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் போது பொதுமக்களுக்கு முககவசம் மற்றும் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது. இதில் தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜ், இன்ஸ்பெக்டர்கள் உலகநாதன், மதனகலா, ஜெயராணி, உறவின்முறை பொருளாளர் பழனியப்பன், கல்லூரி செயலாளர் காசிபிரபு, இணைச்செயலாளர் ராஜ்குமார், கல்லூரி முதல்வர் மதளைசுந்தரம், துணை முதல்வர் மாதவன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து நகரின் பல முக்கிய இடங்களில் இந்த கலைக்குழுவினர் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story