மேலூர் அருகே சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி பலி


மேலூர் அருகே சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி பலி
x
தினத்தந்தி 22 April 2021 10:08 PM IST (Updated: 22 April 2021 10:15 PM IST)
t-max-icont-min-icon

மேலூர் அருகே சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

மேலூர்,

மேலூர் அருகில் உள்ள அய்யர்பட்டியை சேர்ந்தவர் வீரணன் (வயது 45). இவர் கட்டிட கூலி தொழிலாளி. கீழவளவு அருகிலுள்ள அட்டப்பட்டியில் மெய்யப்பன் என்பவருடைய பழைய வீட்டை இடிக்கும் பணியில் வீரணன் ஈடுபட்டுள்ளார். 

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் வீட்டின் பழைய சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் வீரணன் மீது கட்டிட இடிபாடுகள் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கீழவளவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகராஜா மற்றும் போலீசார், வீரணன் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story