பாம்பனில் விவேகானந்தர் மணிமண்டபம் மூடப்பட்டது


பாம்பனில் விவேகானந்தர் மணிமண்டபம் மூடப்பட்டது
x
தினத்தந்தி 22 April 2021 10:38 PM IST (Updated: 22 April 2021 10:38 PM IST)
t-max-icont-min-icon

பாம்பனில் விவேகானந்தர் மணிமண்டபம் மூடப்பட்டது

ராமேசுவரம்,ஏப்
கொரோனா பரவலின் 2-வது அலை தீவிரமாக உள்ளதால் தமிழகம் முழுவதும் கடந்த 20-ந் தேதி முதல் அனைத்து சுற்றுலா இடங்களுக்கும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டதுடன், பூங்கா மற்றும் கடற்கரை பகுதிகளும் மூடப்பட்டன.தனுஷ்கோடி செல்லும் சாலையும் மூடப்பட்டதால் அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து பாம்பன் குந்துகால் கடற்கரையில் உள்ள சுவாமி விவேகானந்தர் மணி மண்டபமும் மூடப்பட்டது. அதேபோல் மணிமண்டபம் அருகில் உள்ள மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக கடல்வாழ் உயிரின அருங்காட்சியகமும் மூடப்பட்டு விட்டது.
பாம்பன் பாலத்தின் நுழைவு பகுதியில் உள்ள மண்டபம் கடற்கரை பூங்காவும் மூடப்பட்டது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மணிமண்டபம் 13 மாதங்களை கடந்தும் இதுவரை திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story