ஆலோசனை கூட்டம்
நிலக்கோட்டை தொகுதி வாக்கு எண்ணும் பணி குறித்து ஆலோசனை கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது.
திண்டுக்கல் :
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதி வாக்கு எண்ணும் பணி குறித்து ஆலோசனை கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது.
இதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபாகர் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், வாக்கு எண்ணும் மையத்திற்கு வருகிற 2-ந்தேதி காலை 5.30 மணிக்கு நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் இருந்து தபால் வாக்குகள் கொண்டு செல்லப்படும்.
தபால் வாக்குகள் எண்ணுவதற்கு 5 மேஜைகளும், சட்டமன்ற தொகுதி வாக்குகள் எண்ணுவதற்கு 14 மேஜைகள் போடப்படும்.
ஒரு மேஜைக்கு வாக்கு எண்ணுவதற்கு ஒரு மேற்பார்வையாளர், ஒரு உதவியாளர் மற்றும் வாக்கு எண்ணிக்கையை மேற்பார்வையிட மத்திய அரசு அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் ஒருவர் நுண் பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வாக்கு எண்ணும் மையத்துக்குள் ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளில் உள்ள பிரதிநிதிகள் யாருக்கும் அனுமதி கிடையாது.
தேர்தல் முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் உள்பட வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் அனைவரும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் அளிக்கவேண்டும்.
கூட்டத்தில் முன்னாள் அ.தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணக்குமார், தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், தே.மு.தி.க. மேற்கு ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி, நாம் தமிழர் கட்சி தொகுதி பொறுப்பாளர் சங்கிலி பாண்டியன் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story